Skip to main content

பப்ஜி விளையாட முடியாத ஏக்கம்...! தற்கொலையில் முடிந்தது!

Published on 27/10/2020 | Edited on 27/10/2020
MOBILE IN INCIDENT IN KOVAI

 

ஆன்ட்ராய்டு செல்போன் நவீன உலகத்தின் வளர்ச்சி என்றாலும் அதில் அதிகமான பாதிப்பும் அதன் மூலம் ஏற்படும் தற்கொலைகளும் அதிகமாகி விட்டது. குறிப்பாக விளையாட்டில் ஈடுபடும் சிறுவர்கள், இளைஞர்கள் அதில் அடிமைகளாக மாறிப் போய் வாழ்வை முடித்துக் கொள்கிறார்கள்.

கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் அருண். இவர் கோவையில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த ஒரு வருடங்களாக பள்ளிக்கு செல்லாமல் செல்போனில்  பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகி தொடர்ந்து விளையாடிக் கொண்டே இருந்துள்ளார். பெற்றோர் எவ்வளவோ தடுக்க முயன்றும் முடியவில்லை. இதன்காரணமாக அருணின் தந்தை இவரை கோவையில் உள்ள மனநல மருத்துவமனையில் சேர்த்தி கடந்த இரண்டு மாதங்களாக சிகிச்சை கொடுத்துள்ளனர். 

பிறகு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் கடந்த மூன்று மாதங்களாக அருனை தங்கியிருக்க வைத்துள்ளார். ஆனால் பப்ஜி விளையாட்டு இல்லாமல் பித்து பிடித்தது போல அந்த இளைஞன் இருந்துள்ளான். இந்த சூழ்நிலையில் 27 ந் தேதி மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனி அறைக்குச் சென்று தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்துக்கு வந்த புஞ்சை புளியம்பட்டி காவல் துறையினர் இறந்த அருணின் உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து புஞ்சைபுளியம்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகி சிறுவன் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

தொடரும் சோகம்; வெள்ளியங்கிரி மலையேறுவோர் கவனத்திற்கு

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Ongoing Tragedy; Attention Velliangiri Mountaineers

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், தொடர்ந்து சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளியங்கிரி  மலை  மீது ஏற முயன்ற மூன்று பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (68) வயது. மருத்துவரான இவர் நேற்று நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். இன்று காலை நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். இந்த மூன்று பேரின் சடலங்களையும் கீழே கொண்டு வரும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

24 மணி நேரத்தில் 3 பேர் இதற்கு முன்னதாகவே இரண்டு பேர் என மொத்தம் 5 பேர் வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் போது உயிரிழந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதயக் கோளாறு, மூச்சுத்திணறல் பாதிப்பு, சர்க்கரை நோய், உடல் பருமன் உள்ளவர்கள் வெள்ளியங்கிரி மலையேற வேண்டாம் என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.