The mob that parked the car and fled! Surrounding  Police!

திருச்சி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருளின் பயன்பாட்டை கண்டறிய நுண்ணறிவுப்பிரிவு கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் திருச்சி போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு துணைக்கண்காணிப்பாளர் பரத் சீனிவாஸ் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் உதவி ஆய்வாளர், காவலர்கள் ஆகியோர் திருச்சி, சமயபுரம் சுங்கச்சாவடி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

Advertisment

அப்போது சுங்கச்சாவடியைக் கடந்து வேகமாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்ய முற்பட்ட போது வாகனத்தில் இருந்து இறங்கி தப்பி ஒட முயற்சித்த 2 பேரை போலீசார் சுற்றிவளைத்துப் பிடித்தனர். அவர்கள் ஓட்டி வந்த வாகனத்தை சோதனை செய்ததில் சுமார் 22 கிலோ எடையுள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு 2 லட்சத்து 20 ஆயிரம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். பின்ன அவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர் ஓட்டி வந்த வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

Advertisment