
உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஒளிப்பதிவு சட்ட வரைவு மசோதா தொடர்பாகக் கருத்தைப் பதிவு செய்ய மத்திய அரசு மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனை அழைத்திருந்த நிலையில், டெல்லி நடைபெற்ற கூட்டத்தில் கமல்ஹாசன் கலந்துகொண்டார். இந்நிலையில் இன்று சென்னை வந்த கமல்ஹாசனை சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்பொழுது பேசிய கமல்ஹாசன், ''என்னுடைய கருத்து என்னவாக இருக்கும் எனத் தெரிந்தும் அந்த கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரத்தை எனக்கு கொடுத்த ஒன்றிய அரசுக்கு எனது நன்றி. கருத்துக் கேட்டவர்களும் கருத்துச் சுதந்திரத்திலும், சிந்தனை சுதந்திரத்திலும் மிகவும் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தது எனக்கு நம்பிக்கை அளிக்கக்கூடியதாக இருந்தது. வரும் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்'' என்றார்.