Skip to main content

''10 கோடிக்கு என்னை விலை பேசினார்கள்'' - ம.நீ.ம சினேகன் பேட்டி 

Published on 18/03/2021 | Edited on 18/03/2021

 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு முடிந்து தேர்தல் பிரச்சாரம், பரப்புரை போன்ற பணிகளில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பிஸியாக இயங்கிவருவதால், தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் தேர்தல் பிரச்சாரம், வேட்புமனு தாக்கல் என இயங்கி வருகிறது.

 

இந்நிலையில், சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் சினேகன் வேட்புமனு தாக்கல் செய்தார். மனு தாக்கலுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த சினேகன், ''விருகம்பாக்கம் தொகுதியில் நான் போட்டியிடாமல் இருக்க என்னிடம் 10 கோடி ரூபாய் விலை பேசினார்கள்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்