Advertisment

நடிகர் கமல்ஹாசன் அதிக வாக்குகளை பெறுவார்: நடிகை கஸ்தூரி டிவீட்!

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே குறித்தும், அவருடன் இந்து மதத்தை ஒப்பிட்டு பேசியிருந்தார். கமலின் கருத்துக்கு பல்வேறு கட்சி தலைவர்கள், இந்து அமைப்புகள் கண்டணங்களைத் தெரிவித்து வருகின்றனர். அது தொடர்பாக பல்வேறு வழக்குகளும் பதியப்பட்டு வரும் நிலையில் நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் "கமல் 30 வினாடிபேசியதை 3 நாளா பேசிக்கிட்டுருக்கோமே...பேசியே ஒரு படத்தை சூப்பர் ஹிட் ஆக்கினவங்க இப்போ கமல் பேசுனதை நாடு முழுக்க பிரபலப்படுத்திட்டாங்க....

Advertisment

kasthuri

இதை விட அவருக்கு சூப்பர் பிரச்சாரம் அமையுமா? நான் நினைக்கிறேன் நான்கு சட்டமன்ற தொகுதியிலும் நினைச்சதை விட அதிக ஓட்டு வாங்குவாறு பாருங்க"! என நடிகர் கமலுக்கு தனது ஆதரவை தெரிவிக்கும் வகையில் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதே போல் பாஜகவை மறைமுகமாக நடிகை கஸ்தூரி சாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை கஸ்தூரி தொடர்ந்து அரசியல் மற்றும் சமூகம் குறித்த கருத்துக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

Advertisment

kamalhaasan kasthuri
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe