''வெற்றி வாகை சூடுவோம்'' -கமல் பேச்சு!

mnm Kamal speaks!

கரோனா பாதிப்புக்குப் பிறகு டிஸ்சார்ஜ் ஆன நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், ''உயிரே... உறவே... தமிழே... வணக்கம். நலமாக உள்ளேன். நான் நலம்பெற முக்கிய காரணங்கள் இரண்டு. ஒன்று மருத்துவம் அதற்கு நிகரான காரணம் உங்களது அன்பும். அதனால்தான் நான் மீண்டு வந்ததாக நான் நினைக்கிறேன். நான் படுத்துக்கிடந்த நேரத்திலும் கூட தொடர்ந்து அயராது உழைத்த நம் மய்யத்தவருக்கு என் வணக்கங்கள்... வாழ்த்துகள்... தொடர்ந்து செய்யுங்கள். உள்ளாட்சியில் சுயாட்சி காண குரல் கொடுப்போம். நாம் கிராம சபையைப் பெரிதாக மக்களிடத்தில் கொண்டு சேர்த்த ஒரு சக்தி என்றால் மிகையாகாது. அது மட்டுமே நமது அடையாளமாக இல்லாமல், நடக்கவிருக்கும் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி தேர்தல்களில் களத்தில் இறங்கி வெற்றியும் காண வேண்டும் என்பது என்னுடைய ஆசை. நம்மிடம் இருக்கும் கருத்து வேறுபாடுகளை எல்லாம் ஓரம் கட்டி வைத்து விட்டு வேலையைப் பாருங்கள்'' என்றார்.

kamalhassan Makkal needhi maiam
இதையும் படியுங்கள்
Subscribe