l;'

தமிழகத்தில் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர் நேர்காணல், தொகுதிப் பங்கீடு என பரபரப்பாக இயங்கி வருகிறது. திமுக, அதிமுக கட்சிகள் வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்து பிரச்சாரத்தை துவக்கியுள்ளன.

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் சார்பில், இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 24 வேட்பாளர்கள் கொண்ட இறுதிப் பட்டியலை தற்போது அக்கட்சி வெளியிட்டுள்ளது. ஆயிரம் விளக்கு வேட்பாளராக செரீப் போட்டியிடுகிறார். தாராபுரம் (தனி)தொகுதியில் சார்லி போட்டியிடுகிறார். தொண்டாமுத்தூர் தொகுதியில் ஷாஜகான் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment