மக்கள்நீதி மய்யம் கட்சியின் மாவட்டச் செயலாளர் மறைவுக்கு கமல் ஹாசன் உருக்கமாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

Advertisment

நெல்லை தெற்கு மாவட்டத்தின் மக்கள் நீதி மய்யம்கட்சியின் மாவட்டச் செயலாளராக இருப்பவர் நாராயணமுத்து. இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தற்போது உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். அதில், "தோளோடு தோள் நின்ற தொண்டர். நற்பணி நாட்கள் தொட்டே நம்முடன் பயணப்பட்ட நெல்லை தெற்கு மத்திய மாவட்டச் செயலாளர் திரு. நாராயணமுத்து அவர்களின் இழப்பு ஈடு செய்ய இயலாதது. அவரை இழந்து வருந்தியிருக்கும் குடும்பத்தினருடன், மய்யம் குடும்பத்தார் என்றும் உடனிருப்போம்" என்று கூறியுள்ளார்.

Advertisment