மக்கள் நீதி மய்யத்தில் நாடாளுமன்ற வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு தேர்தலில் களம்கண்ட மூன்று பேர் பாஜகவில் இணைத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டமக்கள் நீதி மய்யத்தில், கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்ட ஸ்ரீ காருண்யா, சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டரவி, அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்ட ராஜேந்திரன் ஆகியோர் பாஜகவில் இணைந்ததாக தகவல்கள் வந்துள்ளன.இதற்கு காரணம்கமல் தலைமையின் மீதான அதிருப்தியா அல்லது சமீப காலமாக கமல் முழு அரசியல் செயல்பாடுகளைகையிலெடுக்கமால் நடிப்பு போன்றவற்றில் கவனம் செலுத்துவதனால் ஏற்பட்ட அதிருப்தியினால் இந்த முடிவுகளை எடுத்தார்களா என்ற கோணத்தில் அரசியல் பார்வையாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.