Advertisment

பெண் தோழியின் பக்கா ப்ளான்; ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கிய நிர்வாகி!

mmk state administrator arrested in obscene video case

Advertisment

சென்னை திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(59). நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் மத்திய பொதுப்பணித்துறை (CPWD - EE) செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார். காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சாலையில் யூனிகான் டவர் என்ற குடியிருப்பு வளாகத்தில் தனியாக வீடு எடுத்து தங்கியுள்ள இவருக்கு, மயிலாடுதுறை சீனிவாசபுரம் கம்பர் தெருவைச் சேர்ந்த ஐயப்பன் மனைவி சுபாஷினி (40) என்பவருக்கு பாலியல் தொழில் புரோக்கர் மூலமாக தொடர்பு ஏற்பட்டு, கடந்த 6 மாதங்களாக இருவரும் தனிமையில் இருந்துள்ளனர்.

ஒவ்வொரு முறையும் காரைக்காலுக்கு செல்லும்போதும் குடும்ப வறுமையை காரணம் காட்டி சிறுக சிறுக சுபாஷினி பணம் பெற்றுள்ளார். கடந்த மாதம் 27-ஆம் தேதி இருவரும் தனிமையில் இருந்ததைவெங்கடேசனுக்கு தெரியாமல் சுபாஷினி தனது செல்போனில் வீடியோ எடுத்துவைத்துக்கொண்டு அதைவைத்து மிரட்டிவந்துள்ளார், கடந்த மாதம் 29-ஆம் தேதி வெங்கடேசனை மயிலாடுதுறை காவேரி நகர் பகுதியில் உள்ள தனியார் விடுதிக்கு வரவழைத்த சுபாஷினி, மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் மாநில இளைஞரணி துணை செயலாளரான மயிலாடுதுறையைச் சேர்ந்த கில்லி பிரகாஷ் (எ) பிரகாஷ் (40) என்பவருக்கு தகவல் தெரிவித்து தனியார் விடுதிக்கு வரவழைத்துள்ளார். அங்கு தனது கூட்டாளிகளான முகமது நசீர் (39), தினேஷ் பாபு (31) ஆகியோருடன் வந்த கில்லி பிரகாஷ் சுபாஷினியுடன் இணைந்து வெங்கடேசனின் கழுத்தில் கத்தியை வைத்து பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. அப்போது அவரிடம் இருந்து ஏடிஎம் கார்டு மற்றும் ஜிபே வாயிலாக ரூ.2.70 லட்சத்தை பிடுங்கி உள்ளனர்.

mmk state administrator arrested in obscene video case

Advertisment

மேலும், சுபாஷினியுடன் வெங்கடேசன் தனிமையில் இருந்த வீடியோவை வெளியிடாமல் இருக்க கூடுதலாக ரூ.10 லட்சம் தர வேண்டும் எனக் கூறி அவரை மிரட்டி அனுப்பியதோடு தொடர்ந்து வெங்கடேசனுக்கு தொந்தரவு அளித்து வந்துள்ளனர். பெருத்த மன உலைச்சலுக்கு ஆளான வெங்கடேசன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து கில்லி பிரகாஷ், சுபாஷினி உள்ளிட்ட நான்கு பேரையும் கைது செய்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஆண் குற்றவாளிகள் மூவரையும் மயிலாடுதுறை கிளை சிறையில் அடைத்தனர். சுபாஷினியை திருவாரூர் சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

கைது செய்யப்பட்ட கில்லி பிரகாஷ் 2011 ஆம் ஆண்டு முதல் சரித்திரப்பதிவேடு குற்றவாளி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு மாதங்களுக்கு முன்பு தருமபுரம் ஆதீனம் குறித்தான ஆபாச வீடியோ இருப்பதாக கூறி பாஜக மயிலாடுதுறை மாவட்ட தலைவர் உள்ளிட்ட பலரும் சிறையில் உள்ளநிலையில், மூமுக மாநில நிர்வாகி ஒருவரும் ஆபாச வீடியோ விவகாரத்தில் கைதாகியிருப்பது மயிலாடுதுறை மக்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

arrested police woman
இதையும் படியுங்கள்
Subscribe