MLA's car involved in accident...

விழுப்புரம் அருகே உள்ளது சாலை அகரம் கிராமம். இந்த கிராமத்தில் நேற்று அங்குள்ள அரசு பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக விழுப்புரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ, டாக்டர். லட்சுமணன் தனது காரில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். அவருடன் நகர கவுன்சிலர்கள் புருஷோத்தமன், மணவாளன் ஆகியோரும் உடன் சென்றனர். நெடுஞ்சாலையில் அவர்களது கார் சென்று கொண்டிருந்தபோது சாலை அகரம் பஸ் நிறுத்தத்திற்கு அருகில் இவர்களுக்கு பின் வந்த சரக்கு லாரி ஒன்று எம்.எல்.ஏவின் கார் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

Advertisment

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எம்.எல்.ஏ லட்சுமணன் காயமின்றி உயிர்த்தப்பினார். மற்றவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. காரின் பின்பகுதி மட்டும் சேதமடைந்துள்ளது. தகவலறிந்த வளவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எம்.எல்.ஏ கார் மீது மோதிய சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ கார் விபத்துக்குள்ளான தகவல் தொகுதியில்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.