பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசடைந்து பூமிக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனால் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தி ‘மீண்டும் மஞ்சப்பை’என்ற இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார்.
இந்நிலையில் சமீபத்தில் மீண்டும் மஞ்சபை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்ததையடுத்து இன்று காலை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்திற்கு, சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா மஞ்சப் பையுடன் சென்றார். சட்டமன்ற கூட்டத் தொடர் முடிந்து சென்ற போது, காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசனுக்கும் மஞ்ச பையை மாட்டிவிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.