/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_2587.jpg)
தமிழ்நாடு அரசு, அனைவருக்கும் வீடு திட்டத்தைத் துவக்கி அதனை நடைமுறைப் படுத்திவருகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் இன்று விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தி, அத்தொகுதியில் உள்ள 48 பயனாளிகளுக்கு ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தின் கீழ் அவர்களுக்கு ஆணைகளை வழங்கினார். மேலும், 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பையும் பயனாளர்களுக்கு வழங்கினார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_692.jpg)
இந்நிகழ்ச்சியில்,மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ம.ஜெயசந்திரன், ஒன்றிய திமுக செயலாளர்கள் வேம்பி ரவி, ஜெய.ரவிதுரை, ஒன்றிய குழு தலைவர் சங்கிதா அரசி ரவிதுரை உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Follow Us