திருச்சி மண்ணச்சநல்லூர் எம்எல்ஏவாக இருப்பவர் பரமேஸ்வரி முருகன். இவர் அதிமுக கட்சியில் ஓபிஎஸ் ஆதரவாளர்.
கடந்த உள்ளாட்சித் தேர்தலில் இவருடைய கணவர் முருகேசன் உள்ளாட்சி பதவிகளில் ஏலத்திற்கு விற்கிறார் என்கிற சர்ச்சை பெரிய அளவில் வெடித்தது. அதனால் அந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தார். இந்நிலையில் டெண்டரில் கமிஷன் தொகை பிரிப்பதில் எம்எல்ஏ பரமேஸ்வரிக்கும் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமாருக்கும் இடையே அடிதடி மோதல் ஏற்பட்டதாக பரபரப்பு கிளம்பியுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
ஒவ்வொரு மாதம் டெண்டர் கமிஷன் தொகை கணக்கு வழக்கு பார்க்கப்படும். அந்தக் கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் கொடுத்த ஒரு லட்ச ரூபாய் கணக்கு தனக்கு வரவில்லை என்று எம்எல்ஏ கேட்டிருக்கிறார். ஆனால் ஜெயக்குமாரோ பணத்தை உங்களிடம் கொடுத்து விட்டேன். வாங்கிய பணத்தை இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள் என்று குரலை உயர்த்தி கேட்டிருக்கிறார்.
பணத்தை வாங்கவில்லை என்று ஆத்திரம் அடைந்த எம்எல்ஏ பரமேஸ்வரி ஒன்றிய செயலாளரை ஓங்கி அறைந்து இருக்கிறார்.கொடுத்த பணத்தை இல்லை என்று சொல்லி என்னை அடிக்கிறீங்களா? இன்று ஆத்திரமடைந்து திருப்பி அடித்து இருக்கிறார்.
அவமானம் தாங்க முடியாது எம்எல்ஏ பரமேஸ்வரி மயக்கம் போட்டு கீழே விழுந்து அந்த இடத்தையே பரபரப்புக்கு உள்ளாக்கியது. கமிஷன் தொகைக்காக எம்எல்ஏ ஒன்றிய செயலாளர் ஆகியோர் ஒருவரை ஒருவர் அடித்து கொண்ட சம்பவம் கட்சியின் தலைமை வரை சென்றதால் இரண்டு தரப்பையும் சென்னைக்கு வரவழைத்து விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.