மக்களை சட்டமன்றத்துக்கு வரச் செய்த டி.ஆர்.பி. ராஜா!  

MLA TRB Raja who brought the people to the assembly

மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரும் தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளருமான டி.ஆர்.பி.ராஜா தனது ட்விட்டர் பதிவில், சட்டப்பேரவை நிகழ்வுகளைப் பார்வையிட விரும்பும் பொதுமக்கள் அது குறித்து தெரிவித்தால், உரிய அனுமதி பெற்று பேரவை நிகழ்வுகளை நேரில் காண ஏற்பாடு செய்வதாகத் தெரிவித்திருந்தார். இந்தப் பதிவு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், பேரவை நிகழ்ச்சிகளைப் பார்வையிட ஆர்வம் தெரிவித்திருந்தவர்களில் 10 பேரை இன்று (ஏப்ரல் 27) நேரில் வரச் செய்து, அனுமதி பாஸ் கிடைக்கச் செய்து, பேரவை நிகழ்ச்சிகளைப் பார்வையிடச் செய்தார்.

மக்களின் நலனுக்காக மக்கள் பிரதிநிதிகளின் குரல் ஒலிக்கும் சட்டமன்ற நிகழ்வுகளை பொதுமக்கள் பார்வையிடும் வாய்ப்பைத் தொடர்ந்து உருவாக்கித் தருவதென டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறும் நாட்களில் தினமும் 10 பேருக்கு இது போன்ற அனுமதி பெற்றுத் தரவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

MLA
இதையும் படியுங்கள்
Subscribe