Advertisment

‘ஒரு குடும்பம் போல் என்றும் வாழ்வோம்’ -  ம.ஜ.க. தமிமுன் அன்சாரி  

Advertisment

MLA tamimmun ansari diwali wishes

நாடு முழுவதும் நாளை (14ஆம் தேதி) தீபாவளி கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, தீபாவளி வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertisment

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,இந்தியாவில் கொண்டாடப்படும் பெரிய பண்டிகைகளில் தீபாவளி முக்கியமானது.எல்லோரோடும் அன்பு பாராட்டி வாழும் எமது இந்து சகோதர, சகோதரிகள் நாடெங்கும் கொண்டாடும் பண்டிகையாகவும் இப்பண்டிகை இருக்கிறது. அவர்களோடு மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்வது இதமாக இருக்கிறது.

இத்தகையே நேசமே நமது மண்ணின் பண்பாடாகவும் இருக்கிறது. இந்நாளில் கல்வி சேவை, பொது அமைதி, சமூக ஒற்றுமை, பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழல் நலன், நீராதார பாதுகாப்பு என நாடு சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் எல்லோரும் இணைந்து பணியாற்றவும், கொரோனாவுக்கு எதிரான போரில் எல்லோரும் கைக்கோர்த்து மானுடம் காக்கவும் உறுதியேற்போம்.

ஒரு குடும்பம் போல இன்று போல் என்றும் வாழ்வோம் எனக் கூறி, எமது பாசத்திற்குரிய இந்து சமுதாய சகோதர- சகோதரிகளுக்கு, தீபாவளி வாழ்த்துக்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.’ எனத் தெரிவித்துள்ளார்.

mjk MJK THAMINMUN ANSARI
இதையும் படியுங்கள்
Subscribe