
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி சார்பில் கிறிஸ்மஸ் விழா நடைபெற்றது. அதில் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் சிறப்புரை ஆற்றினார். மேலும், அவர் பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் கேக்கை வெட்டி அனைவருக்கும் பகிர்ந்தார். இந்த விழாவில் ஏழை எளிய மக்களுக்கு இஸ்திரி பெட்டி, தையல் எந்திரம், டீ கேன், தள்ளுவண்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் வழங்கினார்.
எம்எல்ஏக்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சம்பள தொகை மூலம் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதாக எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் விழாவில் தெரிவித்தார். முன்னதாக மொராய்ஸ் சிட்டி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் திமுக மூத்த நிர்வாகி வண்ணை அரங்கநாதன், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி திமுக நிர்வாகிகள் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.