பொதுமக்களுக்காக உதவி ஆட்சியரிடம் மனு கொடுத்த எம்.எல்.ஏ.

The MLA petitioned the Assistant Collector for the public

கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், பரங்கிப்பேட்டை அடுத்த அரியகோஷ்டி ஊராட்சியில் குட்டி ஆண்டவர் கோயில் கிராமத்தில் விடுபட்ட 22 பயனாளிகளுக்கு பட்டா வழங்கிட சிதம்பரம் உதவிஆட்சியரிடம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் அப்பகுதி மக்களுடன் மனு அளித்தார்.

அதில் கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், அரியகோஷ்டி ஊராட்சி, குட்டியாண்டவர் கிரமத்தில் சுனாமி நகரில் சர்வே எண்: 156/6-ல் தனியார் தொண்டு நிறுவனங்களின் மூலம் சுனாமியால் பாதிக்கப்பட்ட 82 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளது. இவர்களில் 60 பயனாளிகளுக்கு வருவாய்த்துறையினர் மூலம் ஏற்கனவே பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதில் விடுபட்டுள்ள 22 பயனாளிகளுக்குபட்டா வழங்கிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இவருடன் கட்சியின் சிதம்பரம் நகரச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட கிராமப் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

Cuddalore MLA
இதையும் படியுங்கள்
Subscribe