
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் உள்ள படித்துறையில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் படித்துறையில் உள்ள வசதிகள், நிவர்த்தி செய்யப்பட வேண்டிய குறைபாடுகள் ஆகியவை குறித்து கோவில் நிர்வாகத்திடமும் மாநகராட்சி நிர்வாகத்திடம் கலந்தாலோசனை செய்தார்.
மேலும், பொது மக்களைப் பாதிக்காத வகையில் வேத விற்பன்னர்களின் பணிகள் சுமுகமாக நடைபெறும். அதேசமயத்தில் அம்மா மண்டபத்திற்கு வரக்கூடிய பொதுமக்கள், எந்தவித இடர்பாடுகளும் இல்லாமல் வந்து செல்லவும் அதற்கான நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
Follow Us