Advertisment

கோயில் அறங்காவலருக்கு எம்.எல்.ஏ மிரட்டல்; வெளியான பரபரப்பு வீடியோ

MLA Nallathambi threatened the temple trustee

திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை பகுதியைச்சேர்ந்த விஸ்வநாதன் என்பவரின் மகன் பழனி. இவர் கடந்த 10 வருட காலமாக திருப்பத்தூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் புதுப்பேட்டை பகுதியில் பழனியின் முப்பாட்டனார் அருள்மிகு திருநாராயண சுவாமி திருக்கோயில் கட்டியுள்ளனர். வருவாய்த்துறை மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு நேரடி வாரிசுக்கான ஆவணங்களை பழனி வழங்கி உள்ளார். அதனைத்தொடர்ந்து அந்த ஆவணங்கள் மீது பரிசீலனை செய்து பின்னர் கடந்த13.2.2023 தேதி அன்று பழனியை அந்த கோயிலுக்கு அறங்காவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

இந்த நிலையில் கோவிலுக்கு சொந்தமான 10 ஏக்கர் சொத்தினையும் திருப்பத்தூர் பகுதியில் உள்ள ஏழு கடைகளையும் கடந்த ஒரு வருட காலமாக பராமரித்து பழனி செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக திருப்பத்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஆட்களை விட்டு மிரட்டுவதாகவும் ராஜினாமா கடிதம் வழங்குமாறு வற்புறுத்துவதாகவும் பழனி கூறியபடி சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

Advertisment

மேலும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பியின் பிஏ வெங்கடேசன் என்பவர் பழனியின் வீட்டிற்கு அடியாட்களை அழைத்து சென்று எம்.எல். ஏ-வை நேரில் சந்திக்குமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது. அதோடு, எம்எல்ஏ நல்லதம்பியும் வேறொரு தொலைபேசி எண்ணில் இருந்து பழனிக்கு கால் செய்து பழனியை மிரட்டும் ஆடியோவையும் வெளியிட்டுள்ளார். இந்த மிரட்டலால் பயந்து போன அறங்காவலர் பழனி தனக்கும் தன்னுடைய குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

திமுக கட்சியில் பல ஆண்டுகளாக இருந்து வந்த பழனி, சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பியின் அணுகுமுறை சரி இல்லாத காரணத்தால் தற்போது பிஜேபியில் இணைந்து செயல்பட்டு வருவதாக வீடியோவில் பழனி கூறியுள்ளார். தனக்கும் தன்னுடைய குடும்பத்தாருக்கும் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு முழு பொறுப்பும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி தான் காரணம் என கூறிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

temple MLA TIRUPATTUR
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe