Advertisment

விபத்தில் சிக்கிய பாமகவினரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த எம்.எல்.ஏ.!

விழுப்புரத்தில் நடைபெற்ற பாமக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பாமகவினர் சிலர் ஆட்டோவில் பயணம் செய்துள்ளனர். விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி பொன்னங்குப்பம் ஊராட்சியிலிருந்து ஆட்டோவில் சென்றபோது விக்கிரவாண்டி சுங்கச் சாவடி அருகில் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisment

இதனை அறிந்த விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினருமான நா. புகழேந்தி எம்.எல்.ஏ. நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். மருத்துவக் கல்லூரி முதல்வர் குந்தவிதேவி,நகரச் செயலாளர் நைனா முகமது, ஒன்றிய கவுன்சிலர் இளவரசி ஜெயபால், சம்பத்குமார், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் முரளி மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தார்கள்.

Advertisment

pmk villupuram
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe