மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களைரத்துசெய்யக்கோரியும், டெல்லியில் 300 நாட்களுக்கும்மேலாகப்போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் நேற்று மத்தியஅரசைக்கண்டித்து இந்தியா முழுக்கஎதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்தவகையில், நேற்று திருச்சி மாவட்டம், ஆண்டிமடம் கடைவீதியில், முற்போக்குகூட்டணிக்கட்சிகளின் சார்பில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர்கலியபெருமாள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தில்லை காந்தி, ஆண்டிமடம் வடக்கு ஒன்றிய செயலாளர்ரெங்க.முருகன், தெற்கு ஒன்றிய செயலாளர்தர்மதுரை, காங்கிரஸ் மாவட்டக்கமிட்டிராஜசேகர்,வட்டார தலைவர் பாலு, குடியரசு, விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், ராசா பிள்ளை,பரமசிவம் CPM, திராவிடர் கழகம்மாவட்டச்செயலாளர் சிந்தனைச் செல்வன்,தமிழக வாழ்வுரிமைக் கட்சி கலைவாணன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.