Advertisment

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளுக்கு எம்.எல்.ஏ நேரில் ஆறுதல்

MLA ka pandiyan personal comforts the students undergoing treatment in the hospital

Advertisment

கடலூர் மாவட்டம் சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில்நர்சிங் பயிலும் மாணவர்கள்திங்கள் கிழமைவிடுதியில்வழங்கப்பட்ட உணவை சாப்பிட்டதால்ஒவ்வாமை ஏற்பட்டு 15மாணவிகள் சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெற்று வரும் மாணவிகளைசிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர்கே.ஏ.பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறி பழம், பிரட், ஹார்லிக்ஸ் போன்றவற்றை வழங்கினார். மேலும் பணியிலிருந்த மருத்துவர்களிடம் மாணவிகளுக்குஉரிய சிகிச்சை அளிக்கவேண்டும் என்றார்.

மாணவிகளிடம் அவர் பேசுகையில் இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க கல்லூரி நிர்வாகத்திடம் அறிவுறுத்துவதாக தெரிவித்தார். இவருடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

NURSING student Chidambaram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe