mla ip senthilkumar brithday celebration

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும்பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் வருடந்தோறும் அக்டோபர் 30ம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடுவது வழக்கம்.அதுபோல் இந்த ஆண்டும் நேற்று தனது பிறந்தநாளை முன்னிட்டு கூட்டுறவுத்துறை அமைச்சரும் தனது தந்தையுமான ஐ. பெரியசாமியிடமும்,தாய் சுசீலாவிடமும் வாழ்த்து பெற்ற ஐ.பி. செந்தில்குமார், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குரு பூஜையில் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார். அப்போது முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்த வந்த மாநில இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினும் ஐ.பி.செந்தில்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து, திண்டுக்கல்லில் உள்ள கலைஞர் மாளிகைக்கு வந்த ஐ.பி.செந்தில்குமாருக்குகிழக்கு மாவட்டத்தில் உள்ள கட்சிப் பொறுப்பாளர்களும் தொண்டர்களும் பெருந்திரளாக வந்து மாலை, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அதுபோல் திண்டுக்கல் மாநகரில் உள்ள 17 வது வார்டு மாமன்ற உறுப்பினர் வெங்கடேஷ், ஐ.பி. செந்தில்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு தனது வார்டில் மருத்துவ முகாமை நடத்தினர்.

Advertisment

mla ip senthilkumar brithday celebration

அதில் ஐநூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டுஉடல்நலப்பரிசோதனை செய்தனர்.அவர்களுக்குகிழக்கு பகுதி செயலாளர் ராஜேந்திர குமார் உட்பட நிர்வாகிகள் மருந்து மாத்திரைகளை வழங்கினார்கள். அதுபோல் ஐ.பி.செந்தில்குமாரின் துணைவியார் மெர்சி செந்தில்குமார் தனது கணவரின் பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை எளியவர்களுக்கு இலவச வேட்டி, சேலைகளையும் இனிப்புகளையும் வழங்கினார். அதுபோல் ஆத்தூர், நிலக்கோட்டை, திண்டுக்கல், பழனி ஆகிய பகுதிகளில் உள்ள கட்சிப் பொறுப்பாளர்கள் விளையாட்டுப் போட்டிகளைநடத்தியதுமட்டுமல்லாமல் ஏழைகளுக்கும் ஆதரவற்ற முதியோர் இல்லத்திலும் அன்னதானம் வழங்கினார்கள்.அதுபோல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள பொறுப்பாளர்கள், தொண்டர்கள் எனப்பலரும்அவரின் பிறந்தநாளுக்குவாழ்த்து தெரிவித்து இருந்தனர்.