Advertisment

மாநில கெளரவ தலைவராக எம்.எல்.எ. ஐ.பி.செந்தில்குமார் மனைவி நியமனம்! 

MLA I.P. Senthil Kumar wife appointed as state honorary president

Advertisment

திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ள ஐ.பி.செந்தில்குமாரின் மனைவி முனைவர் அருள்மெர்சி செந்தில்குமார் மெர்சி பவுண்டேசனுடன் பல சமூக சேவைகளையும் செய்து முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல பெயரும் எடுத்து வருகிறார்.

இந்த நிலையில் தான் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் சார்பில் மாநில கௌரவ தலைவராக திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எல்.எ. ஐ.பி.செந்தில்குமாரின் மனைவியான சமூக ஆர்வலரும், மெர்சி பவுண்டேசன் நிறுவனரும் ஊழல் தடுப்புமற்றும் கண்காணிப்பு ஆலோசனை மையம், இந்தியாவின் உறுப்பினரும், குழந்தைகள் பெண்கள் பாதுகாப்பு உறுப்பினரும், பெண்கள் உரிமைகள் பாதுகாப்பு உறுப்பினரும், சேவ ரத்னா முனைவர். அருள்மெர்சி செந்தில்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவர் டாக்டர் ரோஷன் அவர்கள் தனது அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளார்.

அதைக்கண்டு மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களும், சமூக ஆர்வலர்களும் முனைவர். அருள்மெர்சி செந்தில்குமாருக்கு நேரிலும், போன் மூலமாகவும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

dindugal
இதையும் படியுங்கள்
Subscribe