MLA Inigo Udararaj started free bicycles scheme

Advertisment

திருச்சியில் பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் தொடங்கி வைத்தார்.

திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட கீழரண் சாலையில் உள்ள வைகவுண்டஸ் கோஷன் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த திட்டத்தை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் இனிகோ இருதயராஜ் தொடங்கி வைத்தார். பள்ளியின் முதல்வர் இந்திராணி, ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், மாநகர 3வது மண்டல குழு தலைவர் மதிவாணன், மாமன்ற உறுப்பினர்கள்,சண்முகப்பிரியா, பிரபாகரன், திமுக பகுதி செயலாளர், விஜயகுமார், வட்டச் செயலாளர்கள் உள்ளிட்டபலரும் பங்கேற்றனர்.