
திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் கோசாலைக்கு காணிக்கையாக தரப்பட்ட மாடுகளில் உபரியான மாடுகளைக் கிராமப்புறங்களில் உள்ள கோவில் பூசாரி மற்றும் அர்ச்சகர்களுக்கு இலவசமாக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி வழங்கியுள்ளார்.
பசுமாடுகள் 30, கிடேரி கன்று 17, காளை கன்று 13 என மொத்தம் 60 எண்ணிக்கையிலான மாடுகள் இன்று (06.07.2021) ஸ்ரீரங்கம் கோ சாலைக்கு வந்து சேர்ந்தன. அதில் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட கிராமப்புறங்களில் உள்ள கோவில் பூசாரிகள் மற்றும் அர்ச்சகர்களுக்கு என மொத்தம் 34 பேருக்கு உபரியாக வந்த மாடுகள் இலவசமாக வழங்கப்பட்டன.
Follow Us