Advertisment

முதலமைச்சர் இல்லத்தில் நடக்கவிருக்கும் எம்.எல்.ஏ. வீட்டு கல்யாணம்..! 

MLA to be held at Chief Minister's House Home wedding ..!

Advertisment

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. பழனியாண்டி மகனின் திருமணம் நாளை (10.09.2021) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இல்லத்தில் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

சென்னை சித்தரஞ்சன் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினின் இல்லத்தில் 50 பேர் முன்னிலையில் இத்திருமணம் நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 12ஆம் தேதி திருச்சி வயலூர் பகுதியில் இத்திருமண நிகழ்ச்சியின் வரவேற்பு நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. பழனியாண்டி, தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது மகன் திருமண விழாவில் அனைவரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தவும் தலைவர்மு.க. ஸ்டாலின் மற்றும் அறிவாலயம் உத்தரவுப்படி நண்பர்கள், கழக தோழர்கள் யாரும் பிளக்ஸ் பேனர்கள் வைக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe