MLA actively working to turn 100% vaccinated constituency

புதுச்சேரி வில்லியனூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் இருப்பவர் திமுக எம்.எல்.ஏ சிவா. திமுக (தெற்கு) மாநில அமைப்பாளரான இவர், தனது வில்லியனூர் தொகுதியை 100 சதவீத தடுப்பூசி போட்டுக்கொண்ட தொகுதியாக மாற்றுவதற்காக தொகுதி முழுவதும், தடுப்பூசியைப் போடுவதற்கான முகாம்களை ஏற்பாடு செய்து நடத்திவருகிறார்.

Advertisment

அந்தவகையில், நேற்று (18.06.2021) கொம்பாக்கம் அம்பேத்கர் நகரில் கரோனா தடுப்பூசி போடும் முகாமிற்கு ஏற்பாடு செய்து நடத்தினார். இதன் தொடக்க நிகழ்ச்சியில் இரா. சிவா எம்.எல்.ஏ கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள் திலகம், சுவாதி, ஷில்வியா, செவிலியர்கள் வாசுகி, அங்காலேஸ்வரி, ஆஷா சரண்யா, திமுக இளைஞரணி அமைப்பாளர் முகமது யூனுஸ், தொகுதி செயலாளர் ராமசாமி, துணைச் செயலாளர் அங்காளன், இளைஞரணி தொகுதி அமைப்பாளர் மணிகண்டன், கிளைச் செயலாளர்கள் அன்புநிதி, செல்வம், முருகன், ராஜேந்திரன், ஏழுமலை, மாதவன், கலைராஜி, பாலசுப்ரமணி, சங்கர், மோகன், முத்துலிங்கம், மந்திரகுமார், ரமேஷ், மனோகர், அன்பு, சதிஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதனிடையே புதுச்சேரி வில்லியனூர் தொகுதியில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவிற்கான அரிசி, சமையல் செலவுத் தொகை மற்றும் பள்ளி சீருடை தைப்பதற்கான நிதி ஆகியவை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்றுவருகிறது. அந்தவகையில் நேற்று வி.தட்டாஞ்சாவடி அரசு ஆரம்பப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான அரிசி, நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிவா எம்.எல்.ஏ கலந்துகொண்டு தொடங்கிவைத்தார்.

Advertisment