M.K.Stal's book that attracted attention on Udayanidhi's birthday!

திமுக இளைஞரணி செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தனது 46 ஆவது பிறந்த நாளைஇன்று மிகவும் விமரிசையாகக் கொண்டாடினார். இன்று காலையில்அண்ணா, கலைஞர் மற்றும் பெரியார் ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Advertisment

மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள நெடும்பாதையை இன்று மாலை திறந்து வைக்கிறார்.

Advertisment

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை திமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள். எம்.பி.க்கள், மாநில-மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என திமுகவின் அனைத்து நிலைகளிலும் உள்ள நிர்வாகிகள் மிக ஆர்ப்பாட்டமாக கொண்டாடி வருகின்றனர். அன்பகத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்துக்களையும் பெறுகிறார் உதயநிதி.

தொண்டர்களும் நிர்வாகிகளும் அவரவர்களின் சக்திகளுக்கு ஏற்ப உதயநிதியின் பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், திமுகவின் தலைமைக் கழக பேச்சாளர் கடலூர் கு.வாஞ்சிநாதன் மக்களுக்கு வழங்கிய ஒரு புத்தகம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆளுமையை பறைசாற்றும் வகையில்‘தலைவர் தளபதி; புதிய விடியலின் பூபாளம்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார் கு.வாஞ்சிநாதன்.

M.K.Stal's book that attracted attention on Udayanidhi's birthday!

உதயநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு வாஞ்சிநாதன், சென்னையில் இளைஞரணி அலுவலகமான அன்பகம்அமைந்துள்ளதேனாம்பேட்டை பகுதியில்கழக நிர்வாகிகளுக்கும் பொது மக்களுக்கும் அந்தப் புத்தகங்களை வழங்கினார். இன்று ஒரு நாளில் மட்டும் சுமார் 2,000 பேருக்கு அந்த புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலினின் ஆற்றலையும் ஆளுமையையும் விவரிக்கும் புத்தகத்தை வழங்கி உதயநிதியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்ட நிகழ்வு திமுகவினரை ஈர்த்திருக்கிறது.