Skip to main content

'முழு பூசணிக்காயையும் சோற்றில் மறைப்பது போல் பேசுகிறார் மு.க.ஸ்டாலின்'-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 31/03/2024 | Edited on 31/03/2024
nn

சிதம்பரம் புறவழிச்சாலை பகுதியில் அதிமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. அதில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு  சிதம்பரம் நாடாளுமன்ற அதிமுக சத்திரகாசனை ஆதரித்து பேசினர். அப்போது அவர் பேசுகையில், ''வெற்றி கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர் சந்திரகாசனுக்கு இரட்டை இலையில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். திமுக என்பது கட்சி அல்ல அது கம்பெனி அதற்கு முதலாளிகள் ஸ்டாலினும், உதய நிதிஸ்டாலினும்  தான். மக்களுக்காக, தொண்டர்களுக்காக தொடங்கப்பட்ட கட்சி  அதிமுக.  அதிமுக தமிழகத்திலே வலிமையான கட்சி  2 கோடி தொண்டர்கள் உள்ளனர். உழைப்பாளர்கள் நிறைந்த  அதிமுக  இல்லையென்றால் சர்வாதிகார நாடாக திமுக மாற்றிவிடும்.  அதனை தடுத்து நிறுத்தியது அதிமுக தான்.  

ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் அதிமுகவையும் என்னை பற்றியும் அவதூறாக பேசி வருகிறார். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை பொதுச் செயலாளர் பதவியை நீங்கள் கொடுத்துள்ளீர்கள் அதை பெரிதாக நான் கருதவில்லை உங்களில் ஒருவனாக இருப்பதையே பெருமையாக கருதுகிறேன். தமிழகத்தில் அதிமுக 30 ஆண்டு காலம் ஆட்சி அமைந்துள்ளது. இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு கட்சிகள் உள்ளது சாதாரண தொண்டன் சந்திரகாசன் போல் உள்ளவர்களுக்கு வாய்ப்பு வழங்குவார்களா? தலைமைக்கு கட்சிக்கு விசுவாசமாக இருந்ததால், இந்த வாய்ப்பை நீங்கள் வழங்கி உள்ளார்கள். இது அதிமுகவில் மட்டும் தான் முடியும் வேற எந்த கட்சியால் முடியாது. சாதாரண கிளை செயலாளராக உள்ள தொண்டன் முதல்வராக வர முடியும் என்றால் அது அதிமுகவில் தான் முடியும்.

சேலத்தில் ஸ்டாலின் அதிமுக 10 ஆண்டுகால ஆட்சி இருண்ட ஆட்சி என பேசி வருகிறார். இது முழு பூசணிகாயையும் சோற்றில் மறைப்பது போல் பேசி உள்ளார். அத்தனையும் பொய் நீங்கள் நடத்துவது தான் மக்கள் விரோத ஆட்சி.  பத்தாண்டு கால ஆட்சி பொற்கால ஆட்சி, நீங்கள் மக்களை சந்திப்பது இல்லை, மக்கள் பிரச்சனையை கண்டு கொள்ளாமல் ஒரு பொம்மை முதல்வராக உள்ளீர்கள். திமுக ஜெயிக்கப்போவது இல்லை. இத்தோடு திமுகவின் சரித்திரம் முடிய போகிறது. உதயநிதி ஸ்டாலினை முன்னிறுத்த பார்க்கிறார்கள் இது என்ன மன்னர் பரம்பரையா, இது ஜனநாயக நாடு, உங்கள் கட்சியில் எல்லாரையும் அடிமையாக வைத்துள்ளீர்கள்.

அடுத்த திமுக தலைவர் யார் என்று கூறினால் அவர்களை கட்சியை விட்டு நீக்கி விடுவார்கள். ஆனால் அப்படியில்லை அதிமுக ஜனநாயக கட்சி யார் வேண்டுமானாலும் தலைமை பதவிக்கு வரலாம்.  சரிசமமாக நடத்தப்படுகிறது.   திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது,  விலைவாசி உயர்வால் அத்தியாவசிய பொருட்களை பொதுமக்கள் வாங்க முடியாமல் இருக்கிறார்கள். எதிர்க்கட்சியாக இருக்கும் போது கோ பேக் மோடி என கோஷம் போட்ட நீங்கள் ஆளுங்கட்சியின் போது  கம்பளம் விரித்து வரவேற்கிறீர்கள்.  அதிமுக ஆட்சியில் டெல்டா பகுதி பாதுகாக்க வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. வடலூர் பெருவெளியில் 100 ஏக்கரில் விடியா அரசு சர்வதேச மையம் அமைப்பதற்கு கண்டம் தெரிவிக்கிறேன். இதற்கு மக்கள் இந்த தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள்'' என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.