Skip to main content

மு.க. ஸ்டாலின் - மம்தா பானர்ஜி விரைவில் சந்திப்பு!

Published on 31/10/2022 | Edited on 31/10/2022

 

மநவ

 

தமிழ்நாட்டிற்கு வரவுள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்துப் பேச உள்ளார்.

 

தமிழகத்திற்கு வரும் 2ம் தேதி வரவுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள்  இல.கணேசன் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் அவர் அன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழக முதலமைச்சர் இல்லத்திற்குச் செல்ல உள்ளார். தனிப்பட்ட சந்திப்பாக இருந்தாலும் இதில், வரும் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக இருவரும் பேச வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“கடவுள் என்றால் அரசியல் செய்யக் கூடாது” - மம்தா பானர்ஜி விமர்சனம்!

Published on 29/05/2024 | Edited on 29/05/2024
Mamata Banerjee crictized modi If God is God then God should not do politics

மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தனியார் ஊடகத்துக்குப் பேட்டி அளித்த பிரதமர் மோடி, “நான் பயலாஜிகலாக பிறக்கவில்லை என்று நம்புகிறேன். என் தாயார் உயிரோடு இருக்கும்வரை, இந்த உலகிற்கு என் தாய் மூலம்தான் வந்தேன் என நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால், என் தாயாரின் மரணத்திற்கு பிறகு, நான் பலவற்றை சிந்தித்துப் பார்த்தேன். இப்போது நான் அதை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறேன். சிலர் இதற்கு எதிராக பேசலாம். ஆனால், நான் இதை முழுமனதாக நம்புகிறேன். என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான். பயாலஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை. நான் மனிதப்பிறவி அல்ல. ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்தப் பூமிக்கு அனுப்பியிருக்கிறார்” என்று தெரிவித்தார். இதற்குப் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். 

இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியை விமர்சனம் செய்துள்ளார். இறுதிக்கட்ட தேர்தலை முன்னிட்டு கொல்கத்தாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “ஒருவர் (பிரதமர் மோடி) கடவுள்களின் கடவுள் என்கிறார். ஒரு தலைவர் ஜெகன்நாதர் அவரது பக்தர் என்கிறார். அவர் கடவுள் என்றால் கடவுள் அரசியல் செய்யக் கூடாது. கடவுள் கலவரத்தை தூண்டக்கூடாது. 

அவருக்கு கோவில் கட்டி வழிபடுவோம். அவர் விரும்பினால் பிரசாதம், பூக்கள் போன்றவை வழங்குவோம். என்னை மிகவும் நேசித்த அடல் பிஹாரி வாஜ்பாய் போன்ற பல பிரதமர்களுடன் நான் பணியாற்றியுள்ளேன். மன்மோகன் சிங், ராஜீவ் காந்தி, நரசிம்மராவ், தேவகவுடா ஆகியோருடன் நான் பணியாற்றியுள்ளேன். ஆனால், இவரைப் போல் யாரையும் பார்த்ததில்லை, இப்படி ஒரு பிரதமர் நமக்கு தேவை இல்லை” என்று கூறினார்.  

Next Story

“சர்.பிட்டி தியாகராயர் காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி” - தமிழக முதல்வர் புகழாரம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Chief Minister of Tamil Nadu felicitated for Pioneer of Sir Pitti Thiagarayar Breakfast Scheme

திராவிடக் கட்சியின் தாய் அமைப்பான நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் சர்.பிட்டி தியாகராயர். இந்திய சுதந்திரத்துக்கு பிறகு, முன்னாள் முதல்வர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கு முன்பே, அந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகளில், சர்.பிட்டி தியாகராயர் தொடங்கி வைத்து முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார். இவரது நினைவாக தான் சென்னை தியாகராயர் நகர் (தி.நகர்) பகுதிக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்று (27-04-24) சர்.பிட்டி தியாகராயரின் 173ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

சர்.பிட்டி தியாகராயரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்! அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்!

காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி!. தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர், நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.