
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை டெல்லி செல்ல இருக்கிறார்.
குடியரசுத்தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக டெல்லி செல்லும் தமிழக முதல்வர் மரியாதை நிமித்தமாக அவர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருக்க இருக்கிறார்.அதேபோல் பிரதமர் மோடியையும் சந்திக்க இருக்கிறார். இந்த சந்திப்பில் தமிழக அரசின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல் தமிழகத்தில் சிறப்பாக நடந்து முடிந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் நன்றி தெரிவிக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
Follow Us