Sellur K. Raju

Advertisment

கஜா புயலால் மீண்டும் தமிழ்நாடு பாதிக்கப்பட்டுள்ளது. முன்னேற்பாடுகள் மேற்கொண்ட விதம் பாராட்டிற்குரியது என்றும், அதன் தொடர் நடவடிக்கைகளுக்கு ஆட்சியாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

mkstalin

Advertisment

இந்த நிலையில் இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ,

கஜா புயல் தொடர்பான தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டியது வரவேற்கத்தக்கது. மு.க.ஸ்டாலின் தமிழக அரசை வாழ்த்தியுள்ளது ஆரோக்கியமான அரசியலை காட்டுகிறது.

சிறந்த பணியை மேற்கொள்ளும்போது அதனை வாழ்த்துவது அரசிற்கு உற்சாகத்தை தரும். குறை உள்ளபோது அதனை சுட்டிக்காட்டுவதும், சிறந்த பணி மேற்கொள்ளும்போது வாழ்த்துவதும் உற்சாகத்தை தரும். இதே நிலை தொடர வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம் என்றார்.