Published on 13/05/2018 | Edited on 13/05/2018

கருவிலேயே உணர்வூட்டி, உயிரூட்டி, பின் பாலூட்டி, தாலாட்டி, சீராட்டி, பாராட்டி, உறவையும் உலகையும் உவப்புடன் காட்டிய, உயர்ந்த கோயிலாம் அன்புத்தாயிடம் கோபாலபுரம் இல்லத்தில், அன்னையர் தினத்தில் பாசம் மிகுந்த வாழ்த்துகளைப் பெற்றுப் பெரிதும் மகிழ்ந்தேன். தாய், தாய்மொழி, தாய்நாடு அனைத்தும் நமை ஈன்ற அன்னையரே! இன்று மட்டுமல்ல, எந்நாளும் அன்னையரை இதயத்தில் ஏந்தி, ஏற்றிப்போற்றி மதித்திடுவோம்; காத்திடுவோம். அன்னையர் அனைவருக்கும் தாள்பணிந்த வணக்கத்தையும் வாய்மணக்கும் வாழ்த்துகளையும் உரித்தாக்கி உள்ளத்தால் கொண்டாடுகிறேன் என அன்னையர் தினத்தை முன்னிட்டு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.