மரம் நடும் விழாவிற்கு வழிநெடுக பேனர்! அசத்திய மக்கள் நீதி மய்யம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு அருகே மேல கோவில்பட்டி கிராமத்திற்கு செல்லும் சாலையின் இருபுறத்திலும் மரக்கன்றுகளை நட்டு வைப்பதற்கான ஏற்பாடுகளை வத்தலகுண்டு ஒருங்கிணைப்பாளர் மனோ தீபன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஈடுபட்டனர்.

  mkkal needhi maiiam Banner for tree planting ceremony!

மாவட்ட பொறுப்பாளர் ராஜசேகர் மரக்கன்றுகளை நடும் பணியை தொடங்கி வைக்க வருகை தந்தார். முன்னதாக 750 மரக்கன்றுகளை நடுவதற்கு அக்கட்சியினர் 7,500 ரூபாய் செலவழித்து வழிநெடுக டிஜிட்டல் பேனர்களை வைத்தனர். ஊர் முழுவதும் மரம் நடும் விழா போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. பிரம்மாண்ட அரசியல் விழா போல் மரம் நடுவிழாவினை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தது.

mnm

பொதுமக்களிடையே அட்ரா சக்க என்று சொல்லுமளவிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது நிலக்கோட்டை இடைத்தேர்தலில் 3,500 ஓட்டுகள் பெற்றிருந்தாலும், தமிழகத்தில் 3.8 சதவீத வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பெற்றிருப்பதால் அக்கட்சியினர் ஓரளவுக்கு மகிழ்ச்சியில் உள்ளனர். அதனால் அடுத்த கட்டமாக அரசியலில் தடம் பதிப்பதற்கும் கட்சிக்கு ஆள் சேர்ப்பதற்கும் தங்களை ஆயத்தப்படுத்திவருகின்றனர்.

banners Makkal needhi maiam tree
இதையும் படியுங்கள்
Subscribe