M.K.Azhagiri press meet at azhagarkovil marriage

Advertisment

மதுரை அருகே அழகர்கோவிலில் ஒரு திருமண நிகழ்வில் முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி கலந்துகொண்டார். திருமணம் முடிந்து கிளம்பும்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். சட்டமன்றத் தேர்தலில் தங்களது பங்களிப்பு எவ்வாறு இருக்கும் என்ற கேள்விக்கு பதில் அளித்த மு.க.அழகிரி,“சட்டமன்றத் தேர்தலில் புதிய கட்சி தொடங்குவது, கூட்டணி அமைப்பது, ஓட்டு போடுவது போன்ற பங்களிப்பு இருக்கும்” எனத் தெரிவித்தார்.

ரஜினியுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு, “வாய்ப்பு கிடைத்தால் அவருடன் நடிக்க வேண்டுமானால் செய்வேன்.” என்றார். மேலும்,ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் குறித்த கேள்விக்கு, “ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்துவது குறித்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.”

ரஜினிகாந்த் புதிய கட்சி துவங்கி உள்ளது குறித்த கேள்விக்கு, “ரஜினிகாந்த் கட்சி தொடங்கியது குறித்து ஏற்கனவே ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளேன்” என்றார்.