ADVERTISEMENT

மு.க.ஸ்டாலினிடம் ராகுல்காந்தி சிபாரிசு செய்த எம்.பி. சீட்டு யாருக்கு?

04:12 PM Mar 15, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை, தேனி, திருச்சி, கரூர், கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளுர், புதுகை என தொகுதிகள் ஒதுக்கியுள்ளனர்.

ADVERTISEMENT

இதில் மத்திய மண்டலத்தில் கரூர், மற்றும் திருச்சியில் காங்கிரஸ் தொகுதிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கரூர் எம்.பி. தொகுதியை தி.மு.க.வினர் யாருக்கு கிடைக்க போகிறது என்கிற ஆர்வம் எல்லோர் மத்தியிலும் இருந்தது. காரணம், சமீபத்தில் தி.மு.க.வில் இணைந்த செந்தில்பாலாஜியின் அரசியல் பணிகளால் கரூர் ஒட்டுமொத்த திமுகவினர் பயங்கர உற்சாகமாக இருந்தனர். இந்த முறை அவரும் எம்.பி.சீட்டு பணம் கட்டியிருந்தது மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கியிருந்தது.

இந்த திமுகவில் கரூர் எம்.பி. சீட்டுக்காக கரூர் சின்னசாமி, செந்தில்பாலாஜி,நன்னீயூர் ராஜேந்திரன், வழக்கறிஞர் மணி உள்ளிட்ட 16 பேர் விருப்ப மனு செய்திருந்தனர். நேர்காணலுக்கு அனைவரையும் ஒரே நேரத்தில் அழைத்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இந்த முறை கரூர் எம்.பி. தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு செல்கிறது. அவர்கள் கேட்டிருக்கிறார்கள். அதுவும் ஜோதிமணி என்பவர் தான் வேட்பாளர் என்று மு.க.ஸ்டாலின் சொல்ல.... சீனியர் ஒருவர் எழுந்து, தலைவரே அவுங்க கடந்த எம்.பி. தேர்தலில் அவுங்க வாங்கின மொத்த ஓட்டு 16,800 அதிலும் கரூர் தொகுதியில் மட்டும் தான் 5,500 வாங்குனாங்க, அதுவும் அவுங்க சொந்த தொகுதியான அரவக்குறிச்சியில் 2,400 ஓட்டு தான் வாங்குனாங்க, அதுவும் இல்லாம கடந்த சட்டமன்ற தொகுதியில் என்னிடம் 1190 ரூபாய் மட்டும் தான் இருக்கிறது என்று சொன்னவரை வைத்து எப்படி இந்த எம்.பி. தொகுதியில் ஜெயிக்க வைப்பது என்று சொல்லியிருக்கிறார்.

உடனே தி.மு.க. தலைவர் ஸ்டாலின், அண்ணே நீங்க சொல்றது எனக்கு நல்லா புரியுது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி என்னிடம், தமிழ்நாட்டில் 39 தொகுதியில் ஒரு சீட்டு மட்டும் கண்டிப்பாக எனக்காக கொடுங்கள் என்று சிபாரிசு பண்ணியிருக்கார். அதை நாம் மறுக்க முடியாது. ஜெயிக்க வைக்க வேண்டியது நம்முடைய கடமை என்று பதில் சொல்லவும் எல்லோரும் அமைதியாக கலைந்து வந்தனர்.

ஜோதிமணி காங்கிரஸ் கட்சியில் கேரளா மற்றும் கோவா ஆகிய மாநிலங்களுக்கு பாராளுமன்ற வேட்பாளர் தேர்வு குழுவில் அவர் இருக்கிறார் என முக்கிய பொறுப்புகளில் இருக்கிறராம். இவருக்கு தேர்தல் செலவுகளுக்காக கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவக்குமார் என்கிற அமைச்சர் ஒருவரின் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறாராம். இதனால் செந்தில்பாலாஜி பூத் மேற்பார்வையாளர் கூட்டத்தை ஆரம்பித்து 10 ஓட்டுக்கு ஒரு நபர் நியமித்து தேர்தல் வேலையை ஆரம்பித்துவிட்டார் என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT