/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/WhatsApp Image 2018-08-23 at 09.32.56.jpeg)
சென்னை கமலாலயத்தில் உள்ள வாஜ்பாய் அஸ்திக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் பிரதமரும், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அடல் பிகாரி வாஜ்பாய் உடல் நலக்குறைவால், கடந்த 16-ம் தேதி மறைந்தார். அவரது உடல், 17-ம் தேதி முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, வாஜ்பாயின் அஸ்தி தமிழகத்தில் 6 இடங்களில் கரைக்கப்பட உள்ளது. இதற்காக, சென்னை கொண்டுவரப்பட்டுள்ள வாஜ்பாயின் அஸ்தி, தியாகராயநகரில் உள்ள பாஜகவின் மாநில தலைமை அலுவலகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/WhatsApp Image 2018-08-23 at 09.33.01.jpeg)
இந்நிலையில், இன்று காலை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், வாஜ்பாயின் அஸ்திக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் மாநில பாஜக தலைவர் தமிழிசை, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இருந்தனர். தொடர்ந்து மற்ற தலைவர்களும் வாஜ்பாயின் அஸ்திக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
Follow Us