தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அவரது இல்லத்தில் இன்று சந்தித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து திரும்பிய விஜயகாந்த்தை நலம் விசாரிக்க சென்றார்.
இருப்பினும், விஜயகாந்த்தை நேற்று திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசர் சந்தித்து நலம் விசாரித்ததோடு, அரசியல் குறித்து பேசியதாகவும், நாட்டு நலன் கருதி நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் விஜயகாந்த்தை ஸ்டாலின் சந்தித்ததால் கூட்டணி பற்றிய சந்திப்பு என்று அரசியல் களத்தில் விவாதங்கள் எழுந்துள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, தேமுதிகவையும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் கொண்டுவர பெரும் முயற்சி எடுத்தது. பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல், விஜயகாந்த் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.