"தேவையற்ற அறிக்கைகளை நிறுத்திவிட்டு மீட்புப் பணியைச் செய்யச் சொல்லுங்கள்" - பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்

mk stalin urges pm to concentrate on rescue operations in full swing

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே நடைபெற்றுவரும் போர் காரணமாக உக்ரைனில் அசாதாரண சூழல் நிலவுகிறது. தொடர்ந்து, ஏழாவது நாளாகத் தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா, பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றி தலைநகர் கீவ்-வை நோக்கி முன்னேறிவருகிறது. உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் விமானம் மூலம் அழைத்துவரப்படும் நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்-வில் உள்ள இந்தியர்கள் உடனடியாக அந்த நகரத்தைவிட்டு வெளியேறுமாறு இந்தியத் தூதரகம் கடந்த சில நாட்களாக அறிவுறுத்தி வருகிறது. அதேபோல இன்று இன்றிய தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில், நடந்தாவது நாட்டைவிட்டு வெளியேறுங்கள் எனக் கூறியிருந்தது.

இந்நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ளவர்களை மீட்பதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் எனத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், "இந்த இக்கட்டான நேரத்தில் நமது மாணவர்கள் தனித்துவிடப்பட்டுள்ளதாக உக்ரைனிலிருந்து வரும் செய்தி வருத்தத்தை அளிக்கிறது. மாணவர்கள் போர்த் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வேளையில், மத்திய அரசு மாணவர்கள் மீது குற்றம் சாட்டுவதை விட்டுவிட்டு அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவரின் உயிரையும் பாதுகாப்பது இந்திய அரசின் பொறுப்பு. அமைச்சர்கள் தேவையற்ற அறிக்கைகளை வெளியிடுவதை நிறுத்திவிட்டு ஒவ்வொரு இந்தியரையும் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

Russia Ukraine
இதையும் படியுங்கள்
Subscribe