Published on 21/05/2022 | Edited on 21/05/2022

ஊட்டியை உருவாக்கிய ஜான் சல்லீவன் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டரான ஜான் சல்லீவன், ஊட்டியை உருவாக்கியதிலும் அதன் வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றியவர். அவரது பங்களிப்பை போற்றும் விதமாக ஜான் சல்லீவனுக்கு தமிழக அரசு அங்கு சிலை நிறுவியுள்ளது. ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்காவின் முக்கோண சந்திப்பில் வைக்கப்பட்டுள்ள இந்தச் சிலையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். ரூ. 20 லட்ச மதிப்பீட்டில் இந்தச் சிலையானது அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.