இன்று சர்வேதச தந்தையர் தினம் அனுசரிக்கப்பட்டுவருகிறது. சமூக வலைத்தளங்களில் பலர் தந்தையர் தினம் குறித்து வாழ்த்து செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அவரது தந்தையான கலைஞர் குறித்தும், தந்தையர் தின வாழ்த்துக்களையும் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.அந்த பதிவில்,
தந்தை சொல்மிக்க மந்திரமில்லைஎன்று நான் வாழ்ந்ததாகச்சொல்லுவார் தலைவர் கலைஞர்.அவர் எனக்கு தந்தையுமானவர். தாயுமானவர். தலைவருமானவர். உங்களை நினைக்காமல் ஒருநாளும் கடப்பதில்லை! தந்தைக்கு வாழ்த்துக்கள்! அனைத்து தந்தையர்க்கும் தந்தையர் தின வாழ்த்துகள் என கூறியுள்ளார்.