ஸ்ரீவில்லிப்புத்தூரில் காமராஜர் சிலை அவமதிக்கப்பட்டதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இதுகுறித்து ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,
அதிமுக ஆட்சியில் பொதுமக்களைப் போலவே தலைவர்கள் சிலைக்கும் பாதுகாப்பில்லை. ஶ்ரீவில்லிப்புத்தூரில் காமராசர் சிலை அவமதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய இழிசெயல்கள் தொடர இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்ற துணிச்சலே காரணம்.
கையாலாகாத இந்த அரசு சமூக விரோதிகளை அடக்கத் தயங்கக் கூடாது எனக் கூறியுள்ளது.