முரசொலி அலுவலகம் இருக்கும் இடம் பஞ்சமி நிலம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்திருந்த நிலையில், அந்த இடம் பஞ்சமி நிலம் அல்ல என ஆதாரத்துடன் திமுக ஸ்டாலின் டுவிட்டரில் பதிலளித்துள்ளார். அதோடு மட்டுமின்றிராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கு சவாலும் விட்டுள்ளார்.

Advertisment

அந்த டுவிட்டர் பதிவில் அவர் கூறியுள்ளதாவது,

mk stalin twit

மருத்துவர் ராமதாஸ் அவர்கள், தற்போது “முரசொலி “ இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார்.!

Advertisment

அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா- மனை!

நான் சொல்வது பொய்; அது பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்! அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா?

Advertisment