Advertisment

2வது நாளாக தஞ்சையில் காவிரி உரிமை மீட்புப் பயணத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்!

தஞ்சை சூரக்கோட்டையிலிருந்து 2ஆம் நாளாக காவிரி உரிமை மீட்பு பயணத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கினார்.

Advertisment

காவிரி உரிமை மீட்புப் பயணத்துக்காக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். பின்னர் திருச்சி முக்கொம்பில் இருந்து காவிரி உரிமை மீட்புப் பயணத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கினார். இந்த நடை பயணத்தில் திமுக மற்றும் தோழமைக் கட்சித் தொண்டர்கள் திரளாகப் பங்கேற்றனர். முதல் நாளான நேற்று காவிரி கரை வழியாக கரூர் - திருச்சி சாலையில் நடைபயணம் மேற்கொண்டார்.

Advertisment

இதனைதொடர்ந்து, 2வது நாளான இன்று தஞ்சை சூரக்கோட்டையிலிருந்து பயணத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின் பட்டுக்கோட்டை, கோவிலூர், நம்பிவயல், வாண்டையார் குடியிருப்பு வரை செல்கிறார். இந்த பயணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலத் தலைவர் முத்தரசன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

cauvery
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe