மீண்டும் ஒரு மரண அடி கொடுப்போம்-ஸ்டாலின் பேச்சு!

சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என எந்த தேர்தல் வந்தாலும் மீண்டும் ஒரு மரண அடி கொடுக்க தயாராக இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் நடைபெற்ற கருணாநிதி பிறந்தநாள் விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் கடந்த எட்டு வருடங்களாக திட்டங்கள் அறிவிக்க மட்டுமே செய்வதாக சாடினார்.

mk stalin speech in pollachi

மேலும் அவர் பேசும்போது, மக்களை நேரடியாக சந்திக்க வேண்டும். பிரச்சனைகளை சொல்ல வேண்டும். சட்டமன்றத்திலும் பேச வேண்டும். நாடாளுமன்றத்திலும் குரல் கொடுக்க வேண்டும். நீங்கள் என்னென்ன பணிகள் ஆற்றி கொண்டிருக்கிறீர்கள் என்பதை மாதம் ஒருமுறை தலைவராக இருக்கின்ற என்னிடத்தில் கொண்டுவந்து அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.

mk stalin speech in pollachi

உறுதியாக சொல்கிறேன் எப்படி நாடாளுமன்ற தேர்தலில் ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெற்று இன்று ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுகவிற்கு ஒரு மரண அடியை கொடுத்து இருக்கிறோமோ அதே போன்ற ஒரு மரண அடியை விரைவில் சந்திக்க இருக்கக்கூடிய அது உள்ளாட்சித் தேர்தலாகஇருந்தாலும் சரி, சட்டமன்றத்தேர்தலாகஇருந்தாலும் சரி அதில் நாம் நிரூபித்துக்காட்ட போகிறோம் என்கின்ற நிலையை நாம் உருவாக்கி தந்திட வேண்டும் எனக் கூறினார்.

admk pollachi stalin
இதையும் படியுங்கள்
Subscribe