உதகையின் 200ஆவது ஆண்டுவிழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர், விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “பசுமையான, இயற்கையான, எழில்மிகு எனப் பல்வேறு சிறப்புகளை பெற்றிருக்கும் உதகைக்கு நான் வந்திருக்கிறேன். எத்தனையோ முறை நான் ஊட்டிக்கு வந்திருந்தாலும் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக அரசு விழாவிற்காக தற்போது வந்திருக்கிறேன். ஊட்டியைப் போலவே என் மனதும் குளிர்ச்சியாக உள்ளது” எனத் தெரிவித்தார்.
இந்த விழாவில் ரூ.34 கோடி மதிப்பீட்டில் 20 புதிய திட்டங்களைத் தொடங்கிவைத்த முதல்வர் ஸ்டாலின், திமுக அரசு அமைந்த பிறகு பல்வேறு நலத்திட்டங்கள் நீலகிரி மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.