dmk stalin

Advertisment

2021 சட்டமன்றத் தேர்தலுக்கான தீவிரப்பிரச்சாரத்தைதிமுகமுன்னெடுத்து வருகிறநிலையில், இன்று திமுக தலைவர் ஸ்டாலின் அரியலூர், பெரம்பலூர் மாவட்ட திமுகநிர்வாகிகளுடன்,காணொலிவாயிலானபொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டுபேசினார். அப்போது பேசிய அவர்,

" 'கஜா' புயலாக இருந்தாலும் சரி,நீலகிரி நிலச்சரிவாக இருந்தாலும் சரி, கடலூர் வெள்ளமாக இருந்தாலும் சரி, முதலில் மக்களின் கண்ணீரைத்துடைக்கு கை என் கைதான். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதிகேட்டுதற்பொழுது வரை பேசிக்கொண்டிருப்பது நான் மட்டும் தான். அம்மா... அம்மா... என்று நடிக்கிறார்களே. ஊழல் முறைகேடு காரணமாகஆட்சியாளர்கள் உள்ளே சென்றால், அதற்கு திமுகதான் காரணம். இந்திக்கு ஆதரவாக அமித்ஷா கருத்துச்சொன்னபோதும்,ரயில்வே அதிகாரிகள் இந்தியில்தான் பேசவேண்டும் என்ற அறிவிப்பு வந்தபோதும் அதற்கு எதிராகப் போராடி வென்றதுமுதல்,கரோனாகாலத்தில் அனைவருக்கும் கரோனாபரிசோதனை செய்யவேண்டும்,கரோனாநேரத்தில்10-ஆம் வகுப்புக்குதேர்வு வேண்டாம் எனச் சொன்னதுவரை, ஏன்?குப்பைகளுக்கு கட்டணம்வசூலிக்கக்கூடாது என்பதிலும் கூடஅதிமுக அரசு என் பேச்சைத்தான் கேட்டது.

எனவே, ஸ்டாலின் என்ன செய்துகொண்டிருக்கிறார் எனக் கேட்க முதல்வருக்கோ அல்லது அமைச்சர்களுக்கோ தகுதியில்லை. மாநிலத்தின் உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசுக்குஎதிராகச் செயல்பட்டது தி.மு.க. தான். 10ஆண்டுகால ஆட்சிப்பள்ளத்தைச் சரிசெய்யும் ஆட்சியாகதிமுகஆட்சி இருக்கும்" என்றார்.