புதிய கல்விக் கொள்கையை அதிமுக எதிர்க்காமல் இருந்தால் அது அண்ணாவிற்கு செய்யும் துரோகம் - ஸ்டாலின் கருத்து!

df

கடந்த 34 ஆண்டுகளாகக் கல்விக்கொள்கையில் மாற்றம் ஏதும் செய்யப்படாமல் இருந்த சூழலில், கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளின் பெயரில், இந்தியக் கல்விக்கொள்கையை மாற்றியமைத்துள்ளது மத்திய அரசு.

அதன்படி புதிய கல்விக் கொள்கை அறிவிப்புகளை மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது. தமிழகத்தில் பிரதான கட்சிகள் இந்த புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து வருகின்றன. சிலர் ஆதரிக்கவும் செய்கின்றனர். இந்நிலையில் இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். அதில், " புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு மறுத்து, நிராகரிக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையை அதிமுக எதிர்க்காமல் இருந்தால் அது அண்ணாவிற்கு செய்யும் துரோகம். புதிய கல்விக் கொள்கை குறித்து பிரதமர் மோடி உண்மைக்கு புறம்பான கருத்துகளை வெளியிட்டுள்ளார். புதிய கல்விக் கொள்கை மோசமானது என 4 ஆண்டுகளுக்கு முன்பே கருணாநிதி அறிக்கை வெளியிட்டார்" என்று தெரிவித்துள்ளார்.

stalin
இதையும் படியுங்கள்
Subscribe